/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
/
செய்யூரில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
ADDED : நவ 06, 2025 03:06 AM

செய்யூர்:சேதமடைந்த செய்யூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
செய்யூர் அருகே தையலங்காடு கிராமத்தில் வில்லிப்பாக்கம் -செய்யூர் செல்லும் தார் சாலை உள்ளது.
நெடுஞ்சாலைத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இச்சாலையில் தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கடந்த ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, ஒத்திவிளாகம் ஏரியில் இருந்து லாரிகள் வாயிலாக மண் எடுத்துச்செல்லப்பட்டன.
தினசரி ஏராளமான லாரிகள் அதிக பாரம் ஏற்றச்சென்றதால், சாலையின் பல்வேறு இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகினர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பல மாதங்களாக வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று சாலை சீரமைக்கப்பட்டது.

