/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
/
கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
ADDED : அக் 30, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூவத்துார்:சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக, கிழக்கு கடற்கரை சாலை அமநை்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதால், மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், சாலையில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாகின்றனர்.
இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் சார்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.