/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீனிவாசபுரம் சிக்னலில் தொடர் விபத்து சர்வீஸ் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
சீனிவாசபுரம் சிக்னலில் தொடர் விபத்து சர்வீஸ் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சீனிவாசபுரம் சிக்னலில் தொடர் விபத்து சர்வீஸ் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சீனிவாசபுரம் சிக்னலில் தொடர் விபத்து சர்வீஸ் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2024 04:07 AM

கூடுவாஞ்சேரி,: நந்திவரம் -- -கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி சிக்னல் அடுத்த சீனிவாசபுரம் சிக்னலில், தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன.
சில தினங்களுக்கு முன், ஒரு வாகனத்தின் மீது தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து, நேற்று ஒரு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் வந்த குழந்தைகள் சாலையில் விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள், ஜி.எஸ்.டி., சாலையில் சென்று, சீனிவாசபுரம் சிக்னலில் வலது புறமாக திரும்பி, தாம்பரம் நோக்கி செல்கிறது. இந்த சிக்னல் அருகில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் ஜி.எஸ்.டி., சாலையில், சர்வீஸ் சாலை சீரமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சர்வீஸ் சாலையில் உள்ள மழை நீர் வடிகால்வாய் உடைந்து உள்ளது. இதனால், இந்த இடத்தில் மாநகர பேருந்துகள் திரும்பி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், மாநகர பேருந்துகள் திரும்பி செல்லும் போது, சர்வீஸ் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
இப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்கும் பட்சத்தில், மாநகர பேருந்துகள் மிகவும் எளிதாக திரும்பி செல்லவும், எதிர் திசையில் இருந்து சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வரும் வாகனங்கள், மிக எளிதாக சென்று வரவும் வசதியாக இருக்கும். இதனால், விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
எனவே, நெடுஞ்சாலை துறையினர், இப்பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள சர்வீஸ் சாலை பராமரிப்பு பணியை விரைந்து முடித்து, விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

