/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் மேம்பாலத்தில் மின் கம்பங்கள் மாற்றம்
/
தாம்பரம் மேம்பாலத்தில் மின் கம்பங்கள் மாற்றம்
ADDED : செப் 18, 2025 11:16 PM
தாம்பரம்,:தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புறநகரில் அதிக போக்குவரத்து கொண்ட இம்மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, மின் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கம்பங்கள் பொருத்தப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால், பல கம்பங்கள் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன், மின் கம்பம் ஒன்று அடியோடு உடைந்து விழுந்து, வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கம்பங்களை ஆய்வு செய்து, வலுவிழந்த கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இம்மேம்பாலத்தில், 176 மின் கம்பங்கள் உள்ளன. இதில், 150க்கும் மேற்பட்ட கம்பங்கள் வலுவிழந்து, உடையும் நிலையில் உள்ளன.
அதனால், முதல் கட்டமாக, 48 மின் கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கு பதில் புதிய கம்பம் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், அடுத்த கட்டமாக, எஞ்சிய கம்பங்கள் மாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.