/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தின் உள்ளே அனைத்து பஸ்களும் வந்து செல்ல கோரிக்கை
/
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தின் உள்ளே அனைத்து பஸ்களும் வந்து செல்ல கோரிக்கை
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தின் உள்ளே அனைத்து பஸ்களும் வந்து செல்ல கோரிக்கை
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தின் உள்ளே அனைத்து பஸ்களும் வந்து செல்ல கோரிக்கை
ADDED : மே 17, 2025 01:53 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தின் உள்ளே, அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் ஒரு ஏக்கர் பரப்பில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளது.
இங்கிருந்து, செங்கல்பட்டு மற்றும் சென்னை மாநகரின் பல பகுதிகளுக்கு நேரடி பேருந்து சேவை உள்ளது.
ஆனால் இந்த பேருந்து நிலையத்தின் உள்ளே, தாம்பரத்திலிருந்து மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வருவதில்லை.
மாறாக, பேருந்து நிலையத்தின் வெளியே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள நிறுத்தத்தில் பயணியரை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 20 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு இடம் உள்ளது. தவிர, 10 பேருந்துகள் வந்து செல்லவும் இடவசதி உள்ளது.
ஆனால் தாம்பரம், கிளாம்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்வதில்லை.
ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு பேருந்துகள், பேருந்து நிலையத்தின் வெளியே ஜி.எஸ்.டி., சாலையில் நிற்கும் போது, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
எனவே, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தின் உள்ளே, அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.