/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மயானத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டுகோள்
/
மயானத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டுகோள்
ADDED : அக் 30, 2024 01:59 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட, கெங்கதேவன்குப்பம் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அப்பகுதியில் இறப்பவர்களின் சடலத்தை, கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்கின்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், இதற்கு இடையூறாக உள்ள மயானம் அகற்றப்பட உள்ளது. மாற்று இடம் தேர்வு செய்யப்படாமல், தற்போது உள்ள மயானம் அகற்றப்பட்டால், இறப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கெங்கதேவன்குப்பம் மயானத்திற்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்தபின், தற்போது உள்ள மயானத்தை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.