/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
/
நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : மார் 14, 2024 08:00 PM

மதுராந்தகம்,:முதுகரை ரேஷன் கடை அருகே உள்ள பழைய நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முதுகரை ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்கு முன், மக்களின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, சதுர வடிவிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி, குடிநீர் குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சதுர வடிவிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, உறுதித்தன்மை இழந்து, பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
இத்தொட்டி அருகே ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

