/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்
/
அங்கன்வாடி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்
அங்கன்வாடி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்
அங்கன்வாடி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 01, 2025 09:03 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டட பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம் நகராட்சி 6வது வார்டு பகுதியில், பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து உள்ளதால், 2024-- 25-ம் நிதியாண்டில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அதனால், தற்காலிகமாக மதுராந்தகம் நகராட்சியில், மாற்று இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணிகளை விரைந்து முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.