/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை
/
நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க கோரிக்கை
ADDED : மார் 17, 2024 02:15 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், சிறுகளத்துார், ஒழுப்பாக்கம், அண்ணா நகர், பாக்கம்,வயலுார், தாதங்குப்பம் உள்ளிட்ட 10க்கும்மேற்பட்ட கிராம விவசாயிகள், ஏரி மற்றும் கிணற்று பாசனத்தின் மூலம் நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகளிடமிருந்து, அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் நெல் அறுவடைதுவங்க உள்ளதால், சிலாவட்டம் பகுதியில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல்நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சிலாவட்டம் ஊராட்சி தலைவர் கூறியதாவது:
சிலாவட்டம் ஊராட்சியில், இரண்டு ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
சம்பா, குருவை என, இரண்டு பருவங்களில் விவசாயிகள் நெல்விதைப்பில் ஈடுபடுகின்றனர்.
இதனால், சிலாவட்டம் பகுதியில், நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

