/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஐ.பி., நகர் பகுதியில் போலீசார் ரோந்துவர கோரிக்கை
/
வி.ஐ.பி., நகர் பகுதியில் போலீசார் ரோந்துவர கோரிக்கை
வி.ஐ.பி., நகர் பகுதியில் போலீசார் ரோந்துவர கோரிக்கை
வி.ஐ.பி., நகர் பகுதியில் போலீசார் ரோந்துவர கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 08:10 PM
மறைமலைநகர்:-சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தை திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகின்றனர்.
பெண்கள், பள்ளி கல்லுாரி மாணவர்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலையம் அருகில் சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் ரயில்வே கேட் உள்ளது.
ரயில் நிலையத்தில் இருந்து பயணியர் தண்டவாளத்தை கடந்து, வி.ஐ.பி., நகர் வழியாக தினமும் 100க்கும் மேற்பட்டோர் நடந்து செல்கின்றனர்.
சமீப காலமாக இந்த வழியே நடந்து செல்லும் பெண்களை மர்ம நபர்கள் பின் தொடர்வதாகவும், ஆபாச செய்கைகள் செய்வதாகவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், வி.ஐ.பி., நகர் பகுதியில் அடிக்கடி தனியே தங்கி இருப்போரை குறிவைத்து, மொபைல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, அப்பகுதி பெண்கள் கூறியதாவது:
இந்த வழியாகவே தினமும் ரயில் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் அருகிலுள்ள புதர்களில் இருந்து மர்ம நபர்கள் ஒலி எழுப்பி, அச்சுறுத்தல் செய்கின்றனர். திருக்கச்சூர் உள்ளிட்ட 1 கி.மீ., பகுதிகளில் வீடு உள்ள பெண்கள், துாரம் குறைவு என்பதால் நடந்து செல்கின்றனர். அவர்களை இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், தனியே சென்ற பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரை பொது மக்கள் மடக்கி பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபோன்ற காரணங்களால் கல்லுாரி மற்றும் வேலைக்கு பெண்களை அனுப்ப, குடும்ப உறுப்பினர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே இந்த பகுதியில் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.