/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் பழுது சீரமைக்க கோரிக்கை
/
வி.ஏ.ஓ., அலுவலகம் பழுது சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 12, 2025 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி, வி.ஏ.ஓ., கட்டடத்தின் கூரை, அடித்தளம் உள்ளிட்ட பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும், மழைக் காலங்களில் அலுவலகத்தில் மழைநீர் கசிவதால், உள்ளே அமர்ந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது. பட்டா மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றுகள், ஜாதி, வருமானம் உள்ளிட்ட பல சான்றுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பழுதான வி.ஏ.ஓ., கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

