/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான நென்மேலி சாலை சீரமைக்க வேண்டுகோள்
/
சேதமான நென்மேலி சாலை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 24, 2024 09:18 PM

நென்மேலி:திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், நென்மேலி ஊராட்சி, வெங்கடேஷ்வரா நகர், ரெப்யூட் ஹோம்ஸ் மற்றும் மெட்ரோ சமீரா கிரவுன் சிட்டி உள்ளிட்ட பகுதியில், 1,000 த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், கோகுலம் பொதுப்பள்ளியில், 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில் பிரியும் இணைப்பு சாலை வழியாக, குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு, 2 கி.மீ,, துாரம், கடந்த 2018ம் ஆண்டு, கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் சாலை போடப்பட்டது.
இதன் வழியாக, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சாலை பராமரிப்பு இன்றி சீரழிந்து, ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.
இவ்வழியாக, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளங்களில் ஏறி இறங்கும்போது விபத்துகளில் சிக்குகின்றனர்.
இச்சாலையை சீரமைக்கக்கோரி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வர்லர்கள், கலெக்டர், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, சாலையை சீரைமக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.