/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் மினி டேங்க் சீரமைக்க கோரிக்கை
/
குடிநீர் மினி டேங்க் சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 17, 2024 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி அருகே, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஐந்து குடிநீர் மினி டேங்க் அமைக்க, தலா 6 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டது.
தற்போது, குடிநீர் மினி டேங்குகள் அனைத்தும் பயன்பாடின்றி, பழுதடைந்து உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குறைந்த அளவே தண்ணீர் கிடைப்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

