/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமலை வையாவூர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
/
திருமலை வையாவூர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
திருமலை வையாவூர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
திருமலை வையாவூர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
ADDED : அக் 01, 2024 07:22 PM
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில், அலர்மேல் மங்கா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவில், மிகவும் பழமையானது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், இக்கோவில் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்ல போதுமான பேருந்து வசதிகள் உள்ளன.
தற்போது, புரட்டாசி மாத சனிக் கிழமைகளில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கோவில் செயல் அலுவலர் பணிமாறுதல் பெற்று சென்றுவிட்டார். திருமலை வையாவூர் கோவில் செயல் அலுவலகத்தின் கீழ், 15க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
தற்போது, செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்காலிகமாக, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் செயல் அலுவலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
எனவே, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.