/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவல் உதவி மையத்தில் போலீசார் நியமிக்க கோரிக்கை
/
காவல் உதவி மையத்தில் போலீசார் நியமிக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 02:56 AM

செங்கல்பட்டு:புறவழிச்சாலையில் காவல் உதவிமையம், செயல்படாததால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு புறவழிச்சாலையில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், மேம்பாலம் அமைந்துள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும், சர்வீஸ் சாலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டம் செல்லும் பேருந்துகளும், தென்மாவட்டத் திலிருந்து சென்னை செல்லும் பேருந்துகளும் நின்று செல்கிறது.
இங்கு, பொதுமக்கள் நலன் மற்றும் குற்றச்சபங்கள், ரவுடிகள் கண்காணிப்பிற்காக, மகேந்திரா வேர்ல்சிட்டி தனியார் நிறுவனம், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, காவல் உதவிமையம் அமைத்து கொடுத்தது. இந்த மையம் துவக்கத்தில், காலை முதல் இரவு வரை, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால், சீரழிந்து வருகிறது. இங்கு, போக்குவரத்து நெரிசல், பண்டிகை காலங்களில் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் நலன்கருதி, போலீசார் நியமிக்க வேண்டும்.
தற்போது, பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு செல்கினர். இந்த சமயங்களில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணியர் நலன்கருதி, காவல் சேவை மையத்தில் போலீசார் நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
***

