/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நரியூரில் நெற்களம் அமைக்க கோரிக்கை
/
நரியூரில் நெற்களம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 12, 2025 12:48 AM

பவுஞ்சூர்:நரியூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அணைக்கட்டு செல்லும் நெடுஞ்சாலையில் உலர்த்தப்படுவதால் அங்கு நெற்களம் அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் பகுதியில் பவுஞ்சூர்- அணைக்கட்டு செல்லும் 12 கி.மீ., துார நெடுஞ்சாலை உள்ளது.
நரியூர், தொண்டமநல்லுார், லத்துார், கல்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து செல்கின்றன.
நரியூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.
இப்பகுதியில் நெல் உலர்த்த நெற்களம் இல்லாததால், அறுவடை செய்யப்படும் நெல்லை பவுஞ்சூர்- அணைக்கட்டு நெடுஞ்சாலையில் விவசாயிகள் உலர்த்தி வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நெற்களம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.