sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்போரூர், கேளம்பாக்கம் நெரிசலுக்கு ஆறுவழி சாலையால் தீர்வு கிடைத்தது

/

திருப்போரூர், கேளம்பாக்கம் நெரிசலுக்கு ஆறுவழி சாலையால் தீர்வு கிடைத்தது

திருப்போரூர், கேளம்பாக்கம் நெரிசலுக்கு ஆறுவழி சாலையால் தீர்வு கிடைத்தது

திருப்போரூர், கேளம்பாக்கம் நெரிசலுக்கு ஆறுவழி சாலையால் தீர்வு கிடைத்தது


ADDED : அக் 12, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 12, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் -- கேளம்பாக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், ஆறுவழிச்சாலை அமைத்ததால் 80 சதவீதம் நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை 42 கி.மீ., துாரம் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது இச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் நாவலுார் முதல் திருப்போரூர் இடையே பல மென்பொருள் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வளர்ச்சியடைந்து வந்ததால் கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

கேளம்பாக்கம், சென்னை, வண்டலுார், இ.சி.ஆர்., மாமல்லபுரம் சாலைகள் சந்திக்கும் பகுதியாக இருக்கும். அதேபோல, திருப்போரூரில் செங்கல்பட்டு, கேளம்பாக்கம், மாமல்லபுரம், இ.சி.ஆர்., உள்ளிட்ட சாலைகள் சந்திக்கும் பகுதியாக இருக்கும்.

எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் வழியாக பூஞ்சேரி வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, இரண்டு புறவழி சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 465 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, படூர் --- தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் - ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி இடையே ஒரு புற வழிச்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டது.

இப்பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அ.தி.மு.க., ஆட்சியில், 2017ம் ஆண்டு துவடங்கப்பட்டது.

தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், கொரோனா தொற்று, சில இடங்களில் நில எடுப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மந்த கதியில் நடந்தது.

பின் 2021ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சி வந்த நிலையில் மீண்டும் பணி வேகமெடுக்க துவங்கியது. படூர் - -தையூர் இடையே 4.67 கி.மீ., துாரத்திற்கும், காலவாக்கம்- வெங்கலேரி இடையே 7.45 கி.மீ., துாரத்திற்கும் ஆறுவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சாலை அமைத்த பின், சென்னை, வண்டலுார், இ.சி.ஆர்., மாமல்லபுரம் சாலைகளிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி வரும் வாகனங்கள் ஆறுவழிச்சாலையில் திரும்பி செல்கின்றன.

அதேபோல, கேளம்பாக்கம், மாமல்லபுரம், இ.சி.ஆர்., உள்ளிட்ட சாலைகளிலிருந்து திருப்போரூர் நோக்கி வரும் வாகனங்கள், திருப்போரூர் நகருக்குள் வராமல் ஆறுவழிச்சாலையில் திரும்பி செல்கின்றன.

இதனால், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் வாகனங்கள் செல்வது 80 சதவீதம் வரை போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அதற்கேற்ப ஆறுவழிச்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us