/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்தீஸ்வரர் கோவில் குளத்திற்கு வேலி அமைக்க கோரிக்கை
/
நந்தீஸ்வரர் கோவில் குளத்திற்கு வேலி அமைக்க கோரிக்கை
நந்தீஸ்வரர் கோவில் குளத்திற்கு வேலி அமைக்க கோரிக்கை
நந்தீஸ்வரர் கோவில் குளத்திற்கு வேலி அமைக்க கோரிக்கை
ADDED : டிச 04, 2024 02:18 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரத்தில், நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலின் அருகில் உள்ள தெப்பக்குளம், சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு காணப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, மழைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
சில நாட்களாக பெய்த மழையில், தெப்பக்குளத்திற்கு நீர் வரத்து அதிகமாகி, முழுமையாக நிரம்பியுள்ளது.
குளத்தை சுற்றியுள்ள வீடுகளில், அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், தெப்பக்குளம் திறந்தமயமாக இருப்பதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், இந்த குளத்தில் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட செயல்களில் அருகில் வசிப்போர் ஈடுபடுகின்றனர். எனவே, கோவில் குளத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.