/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
/
அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2025 06:43 PM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் இருந்த பழைய அங்கன்வாடி கட்டடம், அபாயகரமான நிலையில் இருந்ததால், நம் நாளிதழ் செய்தியால், கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது.
தற்போது அங்கன்வாடி மையம், இதே பகுதியில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். வாடகை கட்டடத்தில், இட நெருக்கடியுடன் அங்கன்வாடி செயல்பட்டு வருவதால், பலரும் தங்களது குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே, இதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.