/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பி.வி.களத்துார் சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க கோரிக்கை

ADDED : பிப் 22, 2024 10:35 PM
பொன்விளைந்தகளத்துார், செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துாரில், துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, ஒரு செவிலியர் பணிபுரிந்து வருகிறார். பொன்விளைந்தகளத்துார் மற்றும் ஒத்திவாக்கம் ஊராட்சிகளைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த சுகாதார நிலையத்திற்கு, சுற்றுப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி, மாதந்தோறும் பரிசோதனைகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, 24 மணி நேரமும், செவிலியர் தங்கி பணிபுரிய வேண்டும்.
மேலும், பழமையான கட்டடம் என்பதால், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து, கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதன் காரணமாக, காலை நேரத்தில் மட்டும் செவிலியர் பணிபுரிகிறார்.
எனவே, துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். நிலையத்தை தரம் உயர்த்தி, டாக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சுகாதார பேரவை கூட்டத்தில், அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.