/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாழடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
/
பாழடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
பாழடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
பாழடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 01:31 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், முன்னுாத்திக்குப்பம் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், புதிதாக கட்டித் தர கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னுாத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டு விழுதமங்கலம், வளர்பிரை, முள்ளி, கத்தரிச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
தற்போது அந்த கட்டடம், பராமரிப்பின்றி சிதலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், மழைக்காலங்களில் கிராம நிர்வாக பதிவேடுகள், ஆவணங்களை பாதுகாப்பது பெரும் சிரமமாக இருந்து வந்தது. இதனால், தற்காலிகமாக, நுாலக கட்டடத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
எனவே, பழைய கட்டடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக உள்ளதால், கட்டடத்தை இடித்துவிட்டு, அதே பகுதியில், புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்டித்தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.