/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டுப்பிள்ளையார் கோவிலில் நெற்களம் அமைக்க கோரிக்கை
/
காட்டுப்பிள்ளையார் கோவிலில் நெற்களம் அமைக்க கோரிக்கை
காட்டுப்பிள்ளையார் கோவிலில் நெற்களம் அமைக்க கோரிக்கை
காட்டுப்பிள்ளையார் கோவிலில் நெற்களம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2025 10:28 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே காட்டுப்பிள்ளையார் கோவிலில், நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பிள்ளையார் கோவில் கிராமம் உள்ளது. இப்பகுதியில் விவசாயம் மிக முக்கிய தொழில். விவசாயிகள் ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக நெல், மணிலா, உளுந்து, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் நெல் மற்றும் மணிலா போன்றவற்றை உலர்த்தி, பாதுகாப்பதில் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதனால், கதிரடிக்கும் களம் அமைத்து தர கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக பலமுறை, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர்.
தற்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், 2025- - 26ம் நிதியாண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், புதிதாக கதிரடிக்கும் களம் அமைக்க, 9.21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், களம் அமைக்க இடம் தேர்வு செய்து பணியை துவக்குவதில் இழுபறி நீடித்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தற்போது, நெல் அறுவடை துவங்கும் நிலையில் உள்ளதால், அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, நெற்களம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.