/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுார் அரசு துவக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
பாலுார் அரசு துவக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
பாலுார் அரசு துவக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
பாலுார் அரசு துவக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 02:08 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில், சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது.
இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இதே வளாகத்தில், பாலுார் கிராம நிர்வாக அலுவலகம், பாலுார் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
இந்த வளாகத்தில் முன் பக்கம் மற்றும் வலதுபுறத்தில் மட்டும், சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
மற்ற இடங்களில் சுற்றுச்சுவர் இல்லாமல், திறந்த நிலையில் உள்ளது.
இதனால், அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து நாய், ஆடு உள்ளிட்ட கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்கின்றன. மேலும் சுவர்களின் ஓரம் செடிகள் வளர்ந்து உள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வருகின்றன.
இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது:
இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். சுவர் இல்லாததால், பள்ளி ஆசிரியர்கள் கவனிக்காத நேரங்களில், குழந்தைகள் நெடுஞ்சாலைகளில் செல்லும் நிலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலை அதிக கனரக வாகனங்கள் செல்லும் சாலை என்பதால், விபத்து அபாயம் உள்ளது.
எனவே, விடுபட்ட பகுதிகளில் சுற்றுச்சுவர் விரைந்து அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மதில் சுவர் இடிந்து விழுந்துள்ள பகுதிகளில், மீண்டும் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.