/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொளத்தாஞ்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
கொளத்தாஞ்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
கொளத்தாஞ்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
கொளத்தாஞ்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2025 02:19 AM

மறைமலை நகர்:கொளத்தாஞ்சேரி கிராமத்திலுள்ள அரசு துவக்கப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்தாஞ்சேரி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம், மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த வளாகத்தைச் சுற்றி முழுமையாக சுற்றுச்சுவர் மற்றும் 'கேட்' வசதி இல்லாததால், பள்ளி வளாகத்தில் கால்நடைகள் முகாமிட்டு வருகின்றன.
இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களை இங்கேயே வீசிவிட்டுச் செல்கின்றனர். மேலும், பள்ளி மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
தற்போது இந்த வளாகத்தில், செடிகளும் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே, பள்ளி மைதானத்தை சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.