/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை
/
சிங்கபெருமாள் கோவில் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை
ADDED : நவ 25, 2024 01:49 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, 6வது மற்றும் 7வது வார்டுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு, இப்பகுதி மக்களின் பிரதான சாலையாக உள்ளது. இந்த சிமென்ட் சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், தற்போது குண்டும் குழியுமாக பெயர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த சாலை வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ -- மாணவியர் சென்று வருகின்றனர். சாலை குண்டும் குழியுமாக, மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குளக்கரை பகுதியில் இருந்து சுடுகாடு பகுதி வரை உள்ள சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை புதிய சாலை அமைக்கப்படவில்லௌ.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.