/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜல்லி பெயர்ந்த தென்னம்பட்டு சாலை தார்ச்சாலையாக அமைக்க கோரிக்கை
/
ஜல்லி பெயர்ந்த தென்னம்பட்டு சாலை தார்ச்சாலையாக அமைக்க கோரிக்கை
ஜல்லி பெயர்ந்த தென்னம்பட்டு சாலை தார்ச்சாலையாக அமைக்க கோரிக்கை
ஜல்லி பெயர்ந்த தென்னம்பட்டு சாலை தார்ச்சாலையாக அமைக்க கோரிக்கை
ADDED : மார் 20, 2025 01:47 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே தென்னம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பயன்படுத்த முடியாதபடி உள்ளதால், புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தென்னம்பட்டு கிராமம் உள்ளது.
இங்கு, பவுஞ்சூர்- - முதுகரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, புளியரணங்கோட்டை பகுதி சாலை சந்திப்பில் இருந்து தென்னம்பட்டு கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இச்சாலை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
தற்போது, சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதவாறு உள்ளது.
மழை வெள்ள பாதிப்பால், அதிக பாதிப்புக்கு உள்ளாகி, குண்டும் குழியுமாக உள்ளது.
பேருந்து வசதியற்ற கிராமம் என்பதால், இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, தென்னம்பட்டு கிராமத்திற்குச் செல்லும் சாலையை ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக தார்ச்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.