/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடை மீது வளரும் மரக்கன்றை வெட்டி அகற்ற கோரிக்கை
/
பயணியர் நிழற்குடை மீது வளரும் மரக்கன்றை வெட்டி அகற்ற கோரிக்கை
பயணியர் நிழற்குடை மீது வளரும் மரக்கன்றை வெட்டி அகற்ற கோரிக்கை
பயணியர் நிழற்குடை மீது வளரும் மரக்கன்றை வெட்டி அகற்ற கோரிக்கை
ADDED : நவ 17, 2025 07:52 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே தொழுப்பேடு பகுதியில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடை மீது வளரும் மரக்கன்றுகளை வெட்டி அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் அருகே தொழுப்பேடு பகுதியில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினரால் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த நிழற்குடையை தொழுப்பேடு, கடமலைப்புத்துார், நெற்குணம், ஆத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிழற்குடையின் மேல் பகுதியில், ஆலமரக்கன்று வளர்ந்து உள்ளது.
தற்போது நிழற்குடையில் ஏற்பட்டுள்ள விரிசல் பகுதி வழியாக, ஆலமரத்தின் வேர் இறங்கி உள்ளதால், மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
இதனால், நிழற்குடை பலவீனம் அடைந்து வருகிறது.
எனவே, நிழற்குடையின் மேல் வளரும் செடியை வெட்டி அப்புறப்படுத்தி, நிழற்குடையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.