/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
/
அபாய நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
அபாய நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
அபாய நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2025 01:53 AM

அச்சிறுபாக்கம்:சிறுதாமூர் ஊராட்சியில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்கன்வாடி மையம் அருகே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் மூலமாக, மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகளான நிலையில், துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.