/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதடைந்த மகளிர் கழிப்பறைகள் இடித்து புதிதாக அமைக்க கோரிக்கை
/
பழுதடைந்த மகளிர் கழிப்பறைகள் இடித்து புதிதாக அமைக்க கோரிக்கை
பழுதடைந்த மகளிர் கழிப்பறைகள் இடித்து புதிதாக அமைக்க கோரிக்கை
பழுதடைந்த மகளிர் கழிப்பறைகள் இடித்து புதிதாக அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 20, 2025 07:17 PM
சித்தாமூர்:ஆற்காடு கிராமத்தில் பழுதடைந்துள்ள மகளிர் கழிப்பறைகளை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அடுத்த அமந்தங்கரணை ஊராட்சி, ஆற்காடு கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஊராட்சி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், செய்யூர் சாலை ஓரத்தில் மகளிருக்கான கழிப்பறை வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு திறந்தது.
ஆரம்பத்தில் பெண்கள் இந்த கழிப்பறை வளாகத்தை பயன்படுத்திய நிலையில், முறையாக பராமரிக்காததால், தற்போது கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் இப்பகுதி பெண்கள், இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்க கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த மகளிர் கழிப்பறை வளாகத்தை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.