/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கிணற்றை இடிக்க கோரிக்கை
/
பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கிணற்றை இடிக்க கோரிக்கை
பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கிணற்றை இடிக்க கோரிக்கை
பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கிணற்றை இடிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 01:28 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலுள்ள பயன்பாடற்ற குடிநீர் கிணற்றை இடித்து சமன்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த தண்டரை புதுச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் கிணறு வெட்டப்பட்டு, அதிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தப்பட்டது.
நாளடைவில், குடிநீர் கிணறு பயன்பாடின்றி செடி, கொடிகள் முளைத்துள்ளன.
பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற குடிநீர் கிணறு உள்ளதால், கிணற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி, கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது.
எனவே, அச்சிறுபாக்கம் வட்டார கல்வி அலுவலர் மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து, பயன்பாடற்ற குடிநீர் கிணற்றை இடித்து சமன்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.