/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலையோரம் அபாய கிணறு இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
/
தேசிய நெடுஞ்சாலையோரம் அபாய கிணறு இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையோரம் அபாய கிணறு இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையோரம் அபாய கிணறு இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : மே 29, 2025 12:13 AM

மதுராந்தகம், மதுராந்தகம், சிலாவட்டம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அபாயகரமான கிணறு அருகே, இரும்பு தடுப்பு அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அய்யனார் கோவில் சந்திப்பு அருகே உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு -- சிலாவட்டம் பேருந்து நிறுத்தத்திற்கு இடையே, பயன்பாடற்ற கிணறு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த திறந்தவெளி விவசாய கிணறு, 100 அடி ஆழம் வரை உள்ளது. இந்த பகுதியில் தற்போது, சிமென்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இடைவெளி அதிக அளவில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறும் போது, கிணற்றில் விழ வாய்ப்புள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, இந்த கிணறு அருகே தொடர்ச்சியாக இரும்பு தடுப்பு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.