/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்
/
பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 29, 2025 12:48 AM
திருப்போரூர்,பொன்மார் ஊராட்சியில், வங்கி கிளை ஏற்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் அருகே பொன்மார் ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில் ஹவுசிங் போர்டு, மலைத்தெரு, போலச்சேரி என, துணை கிராமங்கள் உள்ளன. மேலும், இப்பகுதிகளில் இரண்டு தனியார் கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளன.
வளர்ந்து வரும் இப்பகுதியில், வங்கி கிளை இல்லை. இதனால் இப்பகுதியில் வசிப்போர் மாம்பாக்கம், கண்டிகை, மேடவாக்கம், கேளம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் தொடர்கிறது. இந்த பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு செல்லும் போது அலைச்சல், நேர விரயம் ஏற்படுவதால், பொன்மார் கிராமத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொன்மார் ஊராட்சியில் தனியார் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.