/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 17, 2025 07:57 PM
சித்தாமூர்: சித்தாமூர் அருகே நுகும்பல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதன் சுற்றவட்டார கிராமங்களான போரூர், கூணங்கரணை, கொல்லத்தநல்லுார், போந்துார், சின்னகயப்பாக்கம் போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3, 000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பொதுமருத்துவம், மகப்பேறு, நோய்த்தடுப்பு என பல்வேறு சேவைகளுக்காக
9 கி.மீ., தொலைவில் உள்ள சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 8 கி.மீ., தொலைவில் உள்ள பொலம்பாக்கம் மற்றும் பெரியகயப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.
மகப்பேறு மற்றும் விபத்துகள் ஏற்பட்டால் முதலுதவிக்கு நீண்ட துாரம் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற வியாதிகளுக்கு பொதுமருத்துவம் பெற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
ஆகையால் இப்பகுதி மக்கள் நலன் கருதி மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நுகும்பல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.