/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க கோரிக்கை
/
மறைமலை நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க கோரிக்கை
மறைமலை நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க கோரிக்கை
மறைமலை நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 16, 2025 01:03 AM

மறைமலை நகர்:மறைமலை நகரில், புதிதாக சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துஉள்ளது.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மறைமலை நகர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்களின் மதிப்பு, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காத்திருப்பு
இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த பகுதிகளில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய செங்கல்பட்டு,- காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
செங்கல்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில் தற்போது, தினமும் 200 'டோக்கன்'கள் வழங்கப்பட்டு, 150 டோக்கன்களுக்கும் அதிகமாக பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
முகூர்த்த நாட்களில் 300 டோக்கன்கள் வழங்கப்பட்டு, 250 பதிவுகள் வரை நடக்கின்றன. 'தக்கல்' முறையில் கூடுதலாக 10 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பத்திரப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், சில நேரங்களில்,'கம்ப்யூட்டர் சர்வர்' பாதிப்பு காரணமாக பதிவுகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து ரியல் எஸ்டேட் முகவர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில், 80 கிராமங்களைச் சேர்ந்தவர்களின் சொத்து, திருமணம், சங்க பதிவுகள் போன்ற பல்வேறு பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இடம் தேர்வு
மறைமலை நகர் பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகம் புதிதாக திறக்க வேண்டும் என, நீண்ட கால கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக, மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரில், இடமும் தேர்வு செய்யப்பட்டது.
அதன் பின், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, மறைமலை நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.