/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டுகோள்
/
துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 14, 2025 10:36 PM
திருப்போரூர்:பூண்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க பகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம், செம்பாக்கம், மானாமதி, சிறுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தோர், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், பூண்டி, ராயமங்கலம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை. இப்பகுதி மக்கள் மருத்துவமனை வசதியில்லாததால், சிரமப்பட வேண்டியுள்ளது.
எனவே, பூண்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.