/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் ஆதார் மையத்தை விரிவுபடுத்த கோரிக்கை
/
செய்யூர் ஆதார் மையத்தை விரிவுபடுத்த கோரிக்கை
ADDED : மார் 04, 2024 01:22 AM

செய்யூர் : செய்யூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, புதிய ஆதார் கார்டு பதிவு, முகவரி, பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், புகைப்படம், கைரேகை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடப்பாக்கம், சூணாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் ஏராளமானோர் ஆதார் திருத்தம் செய்ய வருகின்றனர்.
ஆதார் சேவை மையத்தில், இரண்டு கணினி மட்டும் செயல்படுகிறது. அதனால், ஒருவருக்கு ஆதார் திருத்தம் செய்ய, 10 - 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
சில நேரங்களில் இன்டர்நெட் சேவை குறைபாடு உள்ளது. இதனால் முதியோர், தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆதார் சேவை மையத்தை விரிவுபடுத்தி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

