/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து செயல்படுத்த கோரிக்கை
/
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து செயல்படுத்த கோரிக்கை
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து செயல்படுத்த கோரிக்கை
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 25, 2025 01:51 AM

திருப்போரூர்:திருப்போரூரில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை ஆகியவற்றின் விரிவாக்கப் பணிக்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் சாலை விரிவாக்க பணி, வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மேற்கு புறத்தில் ரவுண்டானா அருகே முதல், இந்தியன் வங்கி வரை இன்னும் வடிகால்வாய் மற்றும் புதிய சாலை சீரமைப்பு பணி துவங்கப்படவில்லை.
சாலையோரத்தில் கரடுமுரடாகவும், மழை நேரத்தில் சேறும் சகதியுமாகவும் உள்ளது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள வணிக கடை வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் என, அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசல்மிக்க ஓ.எம்.ஆர்., சாலை மேற்கு புறத்தில், வடிகால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

