/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டி--19 அரசு பேருந்தை எல்லையம்மன் கோவில் வரை நீட்டிக்க கோரிக்கை
/
டி--19 அரசு பேருந்தை எல்லையம்மன் கோவில் வரை நீட்டிக்க கோரிக்கை
டி--19 அரசு பேருந்தை எல்லையம்மன் கோவில் வரை நீட்டிக்க கோரிக்கை
டி--19 அரசு பேருந்தை எல்லையம்மன் கோவில் வரை நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2025 10:18 PM
செய்யூர்:அச்சிறுப்பாக்கத்தில் இருந்து செய்யூர் வரை இயக்கப்படும் டி-19 அரசு பேருந்தை எல்லையம்மன்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்யூர் முதல் அச்சிறுப்பாக்கம் வரை 'டி-19' அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பேருந்துகள் இந்த தடத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.
செய்யூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வட்டாட்சியர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், நுாலகம், அஞ்சலகம், அரசு மருத்துவமனை, வங்கி போன்றவை செயல்படுகிறது. இதனால் தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் செய்யூருக்கு வந்து செல்கின்றனர்.
சென்னை, புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக பேருந்தில் வரும் மக்கள், எல்லையம்மன் கோவிலில் இறங்கி ஷேர் ஆட்டோ வாயிலாக செய்யூர் வந்து செல்கின்றனர்.
ஷேர் ஆட்டோ இல்லாமல் பொது மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதால், நேர விரயம் ஆகிறது. மேலும் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
'டி-7' தட எண் கொண்ட பேருந்து மட்டும் காலை, மாலை ஒரு வேளை மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் வழியாக எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படுகிறது.
தற்போது செய்யூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலன்கருதி 'டி-19' பேருந்தை அச்சிறுப்பாக்கத்தில் இருந்து எல்லையம்மன் கோவில் வரை இயக்கவும், இந்த தடத்தில் கூடுதலாக பேருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.