/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டலத்தில் அபாய சாலை வளைவு எச்சரிக்கை சிக்னல் அமைக்க கோரிக்கை
/
தண்டலத்தில் அபாய சாலை வளைவு எச்சரிக்கை சிக்னல் அமைக்க கோரிக்கை
தண்டலத்தில் அபாய சாலை வளைவு எச்சரிக்கை சிக்னல் அமைக்க கோரிக்கை
தண்டலத்தில் அபாய சாலை வளைவு எச்சரிக்கை சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 01:15 AM

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., சாலையில், தண்டலத்தில் உள்ள அபாய வளைவு பகுதிகளில் எச்சரிக்கை 'சிக்னல்' அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையில், அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், திருப்போரூர் அடுத்த தண்டலம் அருகே, அடுத்தடுத்து இரண்டு இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன.
இந்த வளைவு பகுதிகளில் சாலையையொட்டி விவசாய நிலம், புதிய மனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கடைகள் உள்ளன.
வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்லும் போது, வளைவு பகுதிகளில் தடுமாறி, விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
மேலும் சாலையிலிருந்து வாகனங்கள் தடுமாறி, விவசாய நிலத்தில் இறங்கி சிக்கிக் கொள்வதும் தொடர்கிறது.
எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தண்டலம் சாலை வளைவு பகுதிகளில் ஆய்வு செய்து, இப்பகுதியில் எச்சரிக்கை 'சிக்னல்' மற்றும் இரும்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.