/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பார்க்கிங் தளத்தில் சிமெண்ட் கற்கள் பதிக்க கோரிக்கை
/
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பார்க்கிங் தளத்தில் சிமெண்ட் கற்கள் பதிக்க கோரிக்கை
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பார்க்கிங் தளத்தில் சிமெண்ட் கற்கள் பதிக்க கோரிக்கை
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பார்க்கிங் தளத்தில் சிமெண்ட் கற்கள் பதிக்க கோரிக்கை
ADDED : மே 06, 2025 12:16 AM

சிங்கபெருமாள்கோவில்,
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் கிராமத்தில் அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், வைகாசி மாதம் பிரம்மோத்சவம், மாசி மாத தெப்ப உத்சவம் விமரிசையாக நடைபெறும்.
வார இறுதி நாட்களில் தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் கார், வேன், டூ- வீலர்களை நிறுத்த, ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் கோவிலின் 'பார்க்கிங்' பகுதி உள்ளது.
இந்த பார்க்கிங் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாலும், உள்ளே செல்லும் நுழைவு பகுதி குறுகலாக உள்ளதாலும், பக்தர்கள் இந்த பார்க்கிங் பகுதியை பெரும்பாலும் பயன்படுத்தாமல் தவிர்த்து வருகின்றனர்.
மேலும் அனுமந்தபுரம் சாலை, தேரடி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால், இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பார்க்கிங் பகுதியை சுற்றி அனைத்து பகுதிகளிலும் கட்டங்கள் கட்டப்பட்டு உள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல், மழைநீர் தேங்குகிறது.
மண் தளமாக உள்ளதால் புழுதி பறந்து, மேடு பள்ளமாக உள்ளது. மழை நேரத்தில் சேறும் சகதியுமாக மாறுவதால் காரில் வரும் பக்தர்கள் பார்க்கிங் பகுதியை தவிர்த்து வருகின்றனர்.
மேலும், பார்க்கிங் பகுதிக்கு செல்ல வழிகாட்டி பலகையும் இல்லாமல் உள்ளது. எனவே, பார்க்கிங் பகுதியில் சிமென்ட் கற்கள் அமைத்து சீரமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.