/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழாமூர் காட்டுப்பகுதி சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
/
கீழாமூர் காட்டுப்பகுதி சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
கீழாமூர் காட்டுப்பகுதி சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
கீழாமூர் காட்டுப்பகுதி சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
ADDED : மே 12, 2025 11:45 PM

மதுராந்தகம், மேல்மருவத்துாரில் இருந்து உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கீழாமூர் செல்லும் காட்டுப்பகுதி சாலையில் மின் கம்பம் அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கத்திலிருந்து எல்.எண்டத்துார், உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், ராமாபுரம் அடுத்த கீழாமூரில் உள்ள காப்புக்காடு வழியாக, 2 கி.மீ., துாரம் காட்டுப்பகுதியைக் கடந்து செல்லும் சாலை உள்ளது.
இந்த காப்புக்காட்டில் மான், காட்டுப்பன்றி, உடும்பு, நரி, முயல் உள்ளிட்ட விலங்குகளும், மயில் உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.
சில மாதங்களுக்கு முன், இந்த காப்புக்காட்டில், பழுதான தார் சாலை சீரமைக்கப்பட்டது.
இதனால், இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் மிகுந்த வேகத்தில் செல்வதால், வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகின்றன.
சில நேரங்களில், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
புதிய சாலை அமைக்கப்பட்டதால், இங்கு மின்கம்பம் அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், காட்டு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி, வாகனங்கள் மெதுவாக செல்லவும் என, விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டும்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.