/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் ஆறுவழி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
திருப்போரூர் ஆறுவழி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
திருப்போரூர் ஆறுவழி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
திருப்போரூர் ஆறுவழி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : மே 28, 2025 01:04 AM

திருப்போரூர்:திருப்போரூர் வட்டத்தில், படூர் -- தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள காலவாக்கம்- - ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது, இரண்டு புறவழிச் சாலைகளும், 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், திருப்போரூர் -- ஆலத்துார் இடையில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில், கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இச்சாலை இருபுறமும் வீடுகள் குறைந்து விவசாய நிலங்கள் உள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படும்.
இதனாலும், பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், பல குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, மேற்கண்ட சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.