/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செட்டிபுண்ணியம் சாலையில் பீதி வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
செட்டிபுண்ணியம் சாலையில் பீதி வேகத்தடை அமைக்க கோரிக்கை
செட்டிபுண்ணியம் சாலையில் பீதி வேகத்தடை அமைக்க கோரிக்கை
செட்டிபுண்ணியம் சாலையில் பீதி வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : மே 02, 2025 01:57 AM

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி -- செட்டிபுண்ணியம் சாலை, 4 கி.மீ., துாரம் கொண்டது.
இந்த சாலையை வடகால், செட்டி புண்ணியம், வெங்கிடாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என பலரும் பயன்படுத்துவதால், இந்த சாலை காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
மேலும், இந்த பகுதியில் உள்ள கல் குவாரி 'கிரஷர்'களில் இருந்தும், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வழியே சென்று வருகின்றன.
இந்த சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகே, பெரிய வளைவு உள்ளது. இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, செட்டிபுண்ணியம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
வளைவில் அச்சம்
இந்த வளைவு பகுதியில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. பள்ளி முடிந்து செல்லும் மாணவ - மாணவியர், சைக்கிளில் மற்றும் நடந்து செல்வோர், இந்த வளைவு பகுதியில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்ப டுத்த, இந்த சாலையில் இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் சாலையில் சில இடங்களில், சிதிலமடைந்து உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும்.
- சுகுமார்,
சிங்கபெருமாள்கோவில்.

