/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரத்தில் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
நந்திவரத்தில் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
நந்திவரத்தில் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
நந்திவரத்தில் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 18, 2025 10:41 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன.
இந்த பள்ளியில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் .
இந்த சாலை வழியாக, பெருமாட்டு நல்லுார், காயரம்பேடு, பாண்டூர், திருப்போரூர் வரை இந்த சாலை செல்கிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது.
இந்த சாலையில் நடந்து செல்லும் மாணவர்களுக்கும்,சாலையை கடந்து செல்லும் மாணவர்களுக்கும் வேகத்தடை இல்லாததால், வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி துணைத் தலைவர் லோகநாதன் கூறியதாவது:
பள்ளி அருகில் உள்ள சாலையில் வேகத்தடைகள் அமைத்து , சாலையில் செல்லும் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்வதற்கு வசதியாக மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி அருகில் வேகத்தடைகள் அமைப்பதற்கு,
துறை சார்ந்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.