/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூர் புதிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
திருக்கச்சூர் புதிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
திருக்கச்சூர் புதிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
திருக்கச்சூர் புதிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : டிச 07, 2024 12:55 AM

மறைமலை நகர்,
மறைமலை நகர் -- திருக்கச்சூர் இடையே 5 கி.மீ., நீள நெடுஞ்சாலை உள்ளது. இந்த தடத்தில் திருக்கச்சூர், பேரமனுார், பனங்கொட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையின் இணைப்பு சாலை.
பிரதான சாலையான சிங்கபெருமாள் கோவில் பகுதியில் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் மற்றும் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே 'கேட்' பழுது ஏற்படும் நேரங்களில், வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த சாலையில் பேரமனுார் -- திருக்கச்சூர் இடையே 2.20 கி.மீ., சாலை, 2 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றன.
இதையடுத்து இந்த சாலையில், பேரமனுார் சிவன் கோவில் அருகே உள்ள ஆப்பூர் -- மறைமலைநகர் சாலை, திருக்கச்சூர் -- மறைமலைநகர் சாலை உள்ள சந்திப்பில், புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
புதிதாக சாலை அமைக்கப்பட்டதில் இருந்து, அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் பறக்கின்றன. இதன் காரணமாக, இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி பாதசாரிகளும், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கிராமவாசிகள் கூறியதாவது:
திருக்கச்சூர் சாலை வீடுகளுக்கு நடுவே செல்லும் கிராமங்களை இணைக்கும் சாலை முக்கிய சந்திப்பில் வேகத்தடை இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிறு சிறு விபத்துகளில் சிக்கி, வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.
எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.