/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய் பணியை தீவிரப்படுத்த வேண்டுகோள்
/
மழைநீர் கால்வாய் பணியை தீவிரப்படுத்த வேண்டுகோள்
ADDED : அக் 04, 2024 01:38 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி, ஜே.சி.கே., நகர் பகுதியில், 1,000த்துக்கும் மேற்பட்ட வசிப்பிட பகுதிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழையின் போது, வசிப்பிட பகுதிகளில் மழைநீர் தேங்கி, நகரவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதைத் தவிர்க்க, வடகிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின், மழைநீர் கால்வாயை துார் வாரி சீரமைக்க, நகாரட்சி பொது நிதியில் பணிகள் செய்ய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை, தனியார் ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால், மழைநீர் கால்வாயில், ஆட்கள் வாயிலாக துார் வாரும் பணியை செய்து வருகின்றனர். இதனால், பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் கால்வாய் பணியை தீவிரப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.