/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி அருகே பள்ளம் தடுப்பு வைக்க வேண்டுகோள்
/
அங்கன்வாடி அருகே பள்ளம் தடுப்பு வைக்க வேண்டுகோள்
ADDED : பிப் 17, 2025 03:17 AM

திருப்போரூர்:திருப்போரூர் மலைக்கோவில் அடிவாரம் அருகே, அடுத்தடுத்து இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இந்த இரண்டு அங்கன்வாடி மையங்களிலும், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக இருந்தது.
எனவே, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் நலன் கருதி, மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணியாக, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளத்தின் அருகே மலையடிவாரம் இருப்பதால், கோவிலுக்கும் வரும் பக்தர்கள் அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, மலை படிக்கட்டு ஏறி கோவிலுக்குச் செல்கின்றனர்.
பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஏதும் வைக்கப்படாததால், இரவில் புதிதாக வருபவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
மேலும், அங்கன்வாடி குழந்தைகளும் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது.
எனவே, சுற்றுச்சுவர் அமைக்க எடுக்கப்பட்ட பள்ளத்தைச் சுற்றிலும், பாதுகாப்பிற்காக தடுப்பு அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.