/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது நியாய விலை கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
புது நியாய விலை கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
புது நியாய விலை கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
புது நியாய விலை கடை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 01:44 AM

பவுஞ்சூர்:பாக்கூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பவுஞ்சூர் அடுத்த வீரபோகம் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு பிள்ளையார் கோவில் தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடத்தில், நியாய விலை கடை செயல்பட்டு வந்தது.
இதனால், நாளடைவில் கட்டடத்தின் சுவர் விரிசல் அடைந்து, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மோசமான நிலையில் இருந்தது.
மழைக்காலத்தில் மேல் தளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மழைநீரில் நனைந்தன. இந்த பொருட்களை பாதுகாக்க, விற்பனையாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே, புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், 2024 - 25 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 9.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழைய நியாய விலைக் கடை கட்டடத்திற்கு பின்புறத்தில், புதிய நியாய விலைக் கடை கட்டடம், மூன்று மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த புதிய நியாய விலைக் கடை கட்டடத்தை, விரைந்து பொதுமக்கம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.