/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடற்பயிற்சி கூடத்திற்கு பூட்டு பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
உடற்பயிற்சி கூடத்திற்கு பூட்டு பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
உடற்பயிற்சி கூடத்திற்கு பூட்டு பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
உடற்பயிற்சி கூடத்திற்கு பூட்டு பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : பிப் 12, 2025 12:28 AM

மறைமலைநகர்மறைமலைநகர் நகராட்சி கீழக்கரணை பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இளைஞர்கள் நலன் மேம்படும் வகையில், நியாய விலைக்கடை அருகே உடற்பயிற்சிக்கூடம் கட்டப்பட்டது.
உபகரணங்கள் வசதிகளுடன் துவங்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடம், இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே வரவேற்பை பெற்றது.
திறப்பு விழாவிற்கு பின், சில ஆண்டுகள் மட்டுமே மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
தற்போது மூன்று ஆண்டுகளாக, உடற்பயிற்சிக்கூடம் பூட்டியே உள்ளது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது:
இலவச உடற்பயிற்சிக்கூடம் பூட்டப்பட்டு உள்ளதால், மற்ற பகுதிகளில் உள்ள தனியார் உடற்பயிற்சிக்கூடத்திற்கு அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
முகப்பு பகுதியில் மண் கொட்டப்பட்டு, இந்த அரசு கட்டடம் வீணாகி வருகிறது. மேலும், உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, உடற்பயிற்சிக்கூடத்தை முறையாக பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.