/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்திலிருந்து கரிக்கிலி வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
/
மதுராந்தகத்திலிருந்து கரிக்கிலி வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
மதுராந்தகத்திலிருந்து கரிக்கிலி வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
மதுராந்தகத்திலிருந்து கரிக்கிலி வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
ADDED : மார் 01, 2024 11:42 PM
மதுராந்தகம்:மதுராந்தகத்திலிருந்து புழுதிவாக்கம், கரிக்கிலி, நெல்வாய் கூட்டுச்சாலை வழியாக, உத்திரமேரூர் வரை நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், தடம் எண் டி17, தாம்பரத்திலிருந்து மதுராந்தகம், நெல்வாய் வழியாக, 221 என, இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே, உத்திரமேரூர் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் அரசு கலைக் கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் பயணம் செய்து வருகின்றனர்.
அதேபோல், கரிக்கிலி, மதுராஇந்திராபுரம், கிருஷ்ணாபுரம், மங்கலம், கொளத்துார், வெள்ளப்புத்துார், சித்தாமூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து, ரெட்டமங்கலம், மல்லியங்கரணை, உத்திரமேரூர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்து பள்ளி, கல்லுாரி சென்று வருவதால், பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
இதனால், இத்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, கரிக்கிலி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இத்தடத்தில் ஆய்வு செய்து, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

